dark_mode
Image
  • Sunday, 07 September 2025

கட்சி பதவியில் இருந்து நீக்கியதற்கு மகிழ்ச்சி.. கட்சியை இணைக்கும் பணி தொடரும்: செங்கோட்டையன்

கட்சி பதவியில் இருந்து நீக்கியதற்கு மகிழ்ச்சி.. கட்சியை இணைக்கும் பணி தொடரும்: செங்கோட்டையன்
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான  செங்கோட்டையன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
கடந்த சில நாட்களாகவே செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக, கட்சிக்குள் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா போன்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வந்தார்.
 
எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்ததுடன், "தர்மம் வெல்ல வேண்டும்" என்றும் அவர் கூறியது, அதிமுக தலைமைக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
 
 
செங்கோட்டையனின் இந்த கருத்துக்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கருதப்பட்டு, உடனடியாக அவர் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஏ.கே. செல்வராஜ் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
பதவி நீக்கம் குறித்து செங்கோட்டையன் அளித்த பேட்டியில், "என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கின்றேன், கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்றும் தெரிவித்தார்.
 
மேலும், "பதவியை நீக்குவதற்கு முன் என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்" என்று தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினார். பதவி நீக்கப்பட்ட போதிலும், "அதிமுகவை ஒருங்கிணைக்கும் எனது பணி தொடரும்" என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
 

related_post