
கங்கனா ரனாவத் மற்றும் அவருடைய குடும்பத்தார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
பாலிவுட் நடிகை கங்கனா, அவருடைய மூத்த சகோதிரி ரங்கோலி ரனாவத், தம்பி அக்ஷத் ரனாவத் மற்றும் கமல் குமார் ஜெயின் மீது பதிப்புரிமைச் சட்ட மீறலுக்கான முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
காஷ்மீரைச் சேர்ந்த போர் வீரர் ராணி டிட்டாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி 'டிட்டா: தி வாரியர் ஆஃப் பிரின்சஸ்' என்கிற் படத்தை உருவாக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டதாக கூறி கங்கனா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார் மற்றும் கமல் குமார் ஜெயின் மீது எழுத்தாளர் ஆஷிஷ் கவுல் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.
இவர் போர் வீரர் ராணி டிட்டா குறித்து "காஷ்மீரின் போர் வீரர் ராணி டிட்ட" என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார். இதை படமாக்க விரும்பி கங்கனாவை ஒருமுறை சந்தித்து பேசியுள்ளார் ஆஷிஷ். மேலும் கதை தொடர்பான சில பகுதிகளை கங்கனாவுக்கு மின்னஞ்சல் செய்ததாகவும் அவர் புகார் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தனக்கு தெரியாமல் இந்த படம் குறித்த அறிவிப்பை கங்கனா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். இது தெரியவந்ததை அடுத்து தனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதனால் போலீசாரை நாடியுள்ளதாக புகாரில் எழுத்தாளர் ஆஷிஷ் கவுல் தெரிவித்துள்ளார்.
ஆனால், டிட்டா: 'டிட்டா: தி வாரியர் ஆஃப் பிரின்சஸ் படம் ஆஷிஷ் கவுல் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று நடிகை கங்கனா விளக்கம் அளித்துள்ளதாக தெரிய வருகிறது. எனினும், எழுத்தாளர் ஆஷிஷ் வழங்கிய புகாரை அடிப்படையாக வைத்து கங்கனா ரனாவத், அவருடைய சகோதிரி ரங்கோலி ரனாவத், சகோதரர் அக்ஷத் ரனாவத் மற்றும் கமல் குமார் ஜெயின் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.