ஓணம் பண்டிகை-சிறப்பு ரயில்கள் மற்றும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளால் மக்கள் மகிழ்ச்சி!

தெற்கு ரயில்வே, ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக சென்னை சென்ட்ரலுக்கும் கொல்லத்துக்கும் இடையே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை-கொல்லம்
சேலம் ரயில்வே பிரிவு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ரயில் எண் 06119 சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 17, செப்டம்பர் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். இந்த ரயில் அடுத்த நாள் காலை 6.40 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
கொல்லம் - சென்னை சென்ட்ரல்
ரயில் எண் 06120 கொல்லம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் காலை 10.40 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும். இந்த ரயில் அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.கோவை வழியாக இயக்கம்
இந்த ரயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரை, காயங்குளம், கருநாகப்பள்ளி மற்றும் சாஸ்தாங்கோட்டை ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்கள் மூலம் ஓணம் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பயணிகள் பயனடைவார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்வது நல்லது.மற்றொரு மகிழ்ச்சியான செய்தி
ஆகஸ்ட் முதல் சேலம் கோட்ட ரயில் பயணிகளுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி. கோவை - மன்னார்குடி, கோவை - திருப்பதி, கோவை - நாகர்கோவில் செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் இனி வசதியாகப் பயணிக்கலாம். தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் சில ரயில்களில் Sleeper class பெட்டியும், சில ரயில்கள்ல AC chair car பெட்டியும் சேர்க்க இருக்கிறார்கள். இதனால் நிறைய பேர் கஷ்டமில்லாம பயணம் செய்ய முடியும்.கோவை-மன்னார்குடி
வண்டி எண் 16616 கோவையிலிருந்து மன்னார்குடி செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு Sleeper class பெட்டி ஆகஸ்ட் 1 முதல் நிரந்தரமாக இணைக்கப்படும். அதேபோல் வண்டி எண் 16615 மன்னார்குடியிலிருந்து கோவை வரும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் ஒரு Sleeper class பெட்டி இணைக்கப்படும்.இன்று முதல் இணைக்கப்படும்
வண்டி எண் 22616 கோவையிலிருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு AC chair car பெட்டி நிரந்தரமா இணைக்கப்படும். வண்டி எண் 22615 திருப்பதியிலிருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு AC chair car பெட்டி ஆகஸ்ட் 2 முதல் இணைக்கப்படும்.நாளை முதல் கூடுதல் பெட்டி
வண்டி எண் 22668 கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு Sleeper class பெட்டி ஆகஸ்ட் 2 முதல் இணைக்கப்படும். வண்டி எண் 22667 நாகர்கோவிலிலிருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ்ல ஒரு Sleeper class பெட்டி ஆகஸ்ட் 3 முதல் இணைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.