ஏழைக்கு ஒரு கல்வி, வசதி படைத்தோருக்கு ஒரு கல்வி...' - மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக சரத்குமார்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாகவும், அதை எதிர்ப்பவர்களைக் கடுமையாக விமர்த்தும் பேசியிருக்கிறார் சரத்குமார்.
சமத்துவ மக்கள் கட்சி'யைக் கலைத்துவிட்டு, 'பா.ஜ.க' பிரமுகராகியிருப்பவர் சரத்குமார்.
திரைப்படங்களில் பிஸியாகயிருபவர், அவ்வப்போது தனது எக்ஸ் தளத்தில் தனது அரசியல் கருத்துகளைத் தெரிவித்த வண்ணமிருக்கிறார். சமீபத்தில் விஜய்யின் 'த.வெ.க' 2ம் ஆண்டு தொடக்க விழாவைக் குறிப்பிட்டு, "அன்புச் சகோதரர் விஜய் ரொம்பவே பாப்புலரான நடிகர். உங்களுக்கு தமிழக அரசியல் வியூகத்தை வகுத்துக் கொடுக்க இந்தி தெரிந்த ஒருத்தர் வந்து தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? டேய், எங்கடா இருக்கீங்க நீங்களாம், யாருக்கிட்டட ஃபிராடுத்தனம் பண்றீங்க?
நடைமுறைப்படுத்துவதில் வேறு என்ன சிரமம் இருக்கிறது என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் எவரும் இருசாரார் கருத்தையும் கேட்டோ, அறிக்கைகளை படித்தோ கருத்து சொல்வதில்லை. இதில் மையத்தை சார்ந்தவர்கள் இருமொழிக் கொள்கைக்காக உயிர்விடலாம் என கருத்து தெரிவிப்பதை என்னவென்று சொல்வது? மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி விஷயத்தில் மக்களை தூண்டிவிடுவது அறிவார்ந்த செயல் அல்ல" என்று கூறியிருக்கிறார்
சரத்குமார் - அண்ணாமலை
மேலும், “ஏழைக்கு ஒரு கல்வி, வசதி படைத்தோருக்கு ஒரு கல்வி. தமிழ் வளர்க்கிறோம் என்பவர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ், ஆங்கிலம் மட்டும் கற்பிக்கும் பள்ளிகளில் சேர்த்து தமிழை வளர்க்கலாமே? ஏழைக்கு ஒரு கல்வி, வசதி படைத்தவர்களுக்கு ஒரு கல்வி என்பது எப்படி சமத்துவம் ஆகும்? அரசுப்பள்ளி மாணவர்களிடம் ‘நீ இருமொழிக் கொள்கைதான் படிக்க வேண்டும். உன் தகுதிக்கு இது போதும்' என்பது போல் அணைகட்டி, உங்கள் வியாபார தேவைக்காக அவர்கள் வளர்ச்சியை தடுக்கக் கூடாது” என்று பேசியிருக்கிறார்.
BY.PTS NEWS M.KARTHIK
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description