dark_mode
Image
  • Friday, 29 November 2024

ஏன் திராவிட புதல்வன்னு பேரு வைக்க வேண்டியதுதான? கடுமையாக விமர்சித்த சீமான்!

ஏன் திராவிட புதல்வன்னு பேரு வைக்க வேண்டியதுதான? கடுமையாக விமர்சித்த சீமான்!

திமுக ஆட்சி பொறுப்பற்றுக்குப் பிறகு குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை, கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை என்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், நேற்று கோவை அரசு கல்லூரியில் தமிழ் புதல்வன் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

இந்த திட்டங்கள் மூலம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளை முடக்க திமுக முயல்வதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் வைத்து உள்ளார்.

உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, தர்மபுரி பகுதியில், நாம் தமிழர் கட்சியின் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், "நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர் மற்றும் பெண்களின் வாக்குகளை பெறுவதற்காகவே, தமிழக அரசு புதிய புதிய 1000 ரூபாய் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக தமிழ் புதல்வன் திட்டம் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அனைத்திற்கும் திராவிடம், திராவிட மாடல் என்று சொல்லும் முதல்வர் முக ஸ்டாலின், இந்த திட்டத்திற்கு தமிழ் புதல்வன் என்று வைப்பதற்கு பதிலாக, திராவிட புதல்வன் என்று வைக்க வேண்டியது தானே?

திராவிட கட்சிகள் காசு இல்லாமல் கூட்டத்தை கூட்டினால், நான் என்னுடைய கட்சியை கலைத்து விட்டு செல்கிறேன். உண்மையில் பாஜகவின் பி டீம் நாம் தமிழர் கட்சி அல்ல. திமுக தான் பாஜகவினுடைய மெயின் டீம் என்று சீமான் தெரிவித்தார்.

ஏன் திராவிட புதல்வன்னு பேரு வைக்க வேண்டியதுதான? கடுமையாக விமர்சித்த சீமான்!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description