"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

மூன்றாண்டு காலமாக திமுகவின் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு தி.மு.க., எதையும் செய்யவில்லை என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
பிறந்தநாள் விழா கொண்டாட்டம்:
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 70 -வது பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து 70 கிலோ கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொண்டர்களுக்கு கேசரி, தண்ணீர் பழம், மோர், குளிர்பானங்களை செல்லூர் ராஜூ தன்னுடைய கையால் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தார் அப்போது அவர் கூறுகையில்..,' திமுக ஆட்சிக்கு வந்தால் எல்லா துறைகளையும் கைப்பற்றுவார்கள். அதைப்போல சினிமாத்துறையையும் கைப்பற்றி உள்ளனர். தி.மு.க.,வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு தி.மு.க., எதையும் செய்யவில்லை. உதவியையும், பணத்தையும் தகுதி பார்த்து கொடுக்கிறார்கள். இந்த ஆட்சியில் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி
தமிழகத்தில் இது ஒரு பண்பு. யார் வாழ்த்து சொன்னாலும் எங்களுக்கு மகிழ்ச்சி. சந்தோஷம். தி.மு.க., ஆட்சியை எதிர்த்து பேசினால் அடக்குமுறைகளால் அடக்கப்பார்க்கின்றனர். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். நடிகர் விஜய் நன்றாக செயல்படக்கூடியவர். அவர் அரசியல் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி. எம்.ஜி.ஆரை போல சம்பாதித்த பணத்தை மாணவர்களுக்கு மக்களுக்கு செலவழிக்க நினைக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்துவது அவர்களுக்கும் பெருமை. எங்களுக்கும் பெருமை. அதிமுக பிளவு பட்டா இருக்கிறது? என்று தொண்டர்களிடம் மறு கேள்வி எழுப்பினர். வேப்பம்பரம் போல் பட்டு போச்சு என்று பிற கட்சிகள் அதிமுகவை நினைத்தார்கள்? அது நிறைவேறாது. அதிமுக கட்சி பீனிக்ஸ் பறவை போல அழிவது போல தெரியும் ஆனால் வீறு கொண்டு எழும் அ.தி.மு.கவை தேடி பெரும்பாலான இளைஞர்கள் வருகிறார்கள் அ.தி.மு.க., வேடந்தாங்கல் பறவையைப் போல என்றார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description