
என் தந்தையின் கனவை நிறைவேற்றுவேன் - விஜய் வசந்த்
என் தந்தையின் கனவை நினைவாக்குவது எனது கடமை என விருப்பமனு தாக்கல் செய்த பின்னர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட, மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த் கன்னியாகுமரி பாராளுமன்றத்தில் போட்டியிடுவதற்கு விருப்பமனுவினை அளித்துள்ளேன் எனப் பேசினார். வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது என்றும் கன்னியாகுமரி காங்கிரஸின் கோட்டை என கூறினார்.
ராகுல் காந்தியின் கன்னியாகுமரி வரவு எழுச்சியை கொடுத்திருக்கிறது என்றும் எனது தந்தை வசந்தகுமாரின் கனவை நினைவாக்குவது எனது கடமை, அவர் என்னென்ன திட்டங்களை கொண்டு வருவதாக தெரிவித்து இருந்தரே அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் விஜய் வசந்த் தெரிவித்தார்.