ஈரோடு இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம்; சீமான் திட்டவட்டம்

ஈரோடு இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது;கனடா நாடு ஜனவரி மாதத்தை தமிழர் கலாசாரம் மாதம் என்று அறிவிக்கின்றது. தமிழர்களுக்கான பண்டிகை நாளன்று தேர்வு வைத்தால் எங்களுக்கு தேசப்பற்று வருமா? தேசவெறுப்பு வருமா? புதியக் கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலப் பல்கலைக்கழகங்களின் பட்டங்கள் ஏற்கப்படாது.
புதியக் கல்விக் கொள்கை, ஒரே நாடு, ஒரே தேர்தல் இது எல்லாம் தேவையில்லாத திணிப்பு. உலகத்தில் கல்வியில் முதலிடத்தில் இருப்பது தென் கொரியா. அங்கு எட்டு வயதில்தான் குழந்தைகள் 1ம் வகுப்பு சேர்க்கப்படுகிறார்கள். ஒரு மாணவன் தனக்கான உடையை அவனை உடுத்திக் கொள்ளும் வகையிலும், அவனது உணவை தானே எடுத்து உண்ணும் அளவிற்கு வளரும் வரை அவன் விருப்பப்படியே கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறான். அங்கு எட்டு வயதில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கும் சேர்க்கும்போது, இங்கு அப்பொழுது பொது தேர்வு எழுத சொல்கிறார்கள்.
நான் இருக்கும் வரை நிலத்தின் வளத்தை கெடுக்கும் எந்த திட்டமும் கொண்டு வர முடியாது. ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதற்கு தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம். இவ்வாறு சீமான் கூறினார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description