இஸ்ரோ அறிவியலாளர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்- டாக்டர் ராமதாஸ்

சந்திராயன் 3 நிலவுக்கு அனுப்பப்பட்டு, நிலவை நெருங்கி வரும் நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்துள்ளதால் இஸ்ரோவுக்கு மருத்துவர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சந்திராயன் 3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தரை இறங்குவதற்கான அனைத்து தொழில்நுட்ப செயல்பாடுகளும் தயாராக இருப்பதாக இஸ்ரோ ஏற்கனவே இஸ்ரோ அறிவித்தது.
இந்த நிலையில், இன்று நிலவின் தரைப்பகுதிக்கு நெருங்கி வந்தபோது, விக்ரம் லெண்டர் பிரிந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், சுற்றுவட்டப் பாதையில், விலக்கப்பட்டு நிலவை நோக்கி லேண்டரின் பயணம் மாற்றப்படவுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில்,
‘’நிலவில் உந்துசக்தி கருவியிலிருந்து சந்திரயானின் தரையிறங்கும் கருவி வெற்றிகரமாக பிரிந்தது: இஸ்ரோ அறிவியலாளர்களுக்கு பாராட்டு
ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து ஜூலை 14-ஆம் நாள் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான கருவி விக்ரம் லேண்டர், இன்று வெற்றிகரமாக அதை செலுத்தி வந்த உந்துசக்தி கருவியிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் நுணுக்கமான இந்த பணியை வெற்றிகரமாக சாதித்த இஸ்ரோ அறிவியலாளர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி வரும் 23-ஆம் நாள் நிலவில் இறங்கி ஆய்வை மேற்கொள்ளும்; இதுவரை கண்டறியப்படாத நிலவு குறித்த உண்மைகளை உலகுக்கு சொல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description