dark_mode
Image
  • Sunday, 09 March 2025

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த கவலை

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த கவலை

சென்னை: இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் ஆழ்ந்த கவலை அளிப்பதாக, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதுகுறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, மீன்பிடிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை, எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
 

அவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க, வலுவான மற்றும் பயனுள்ள துாதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இது, மீனவ சமுதாயத்தினரிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதார வருவாய் ஆதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த கவலை

comment / reply_from

related_post