dark_mode
Image
  • Wednesday, 02 July 2025

இன்னுயிர் காப்போம் திட்டம்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!!

இன்னுயிர் காப்போம் திட்டம்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!!

விபத்துக்குள்ளானவர்களுக்கு 48 மணி நேர இலவச சிகிச்சை மற்றும் விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூபாய் 5,000 ஊக்கத்தொகை உள்பட பல சிறப்பு அம்சங்கள் பொருந்திய இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

 
 
* தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 610 மருத்துவமனைகளில் நம்மை காக்கும் 48 - இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
 
 
* சாலை விபத்தில் சிக்கியவர்களின் முதல் 48 மணி நேரத்திற்கான மருத்துவச் செலவை அரசே இந்த திட்டத்தின் மூலம் ஏற்கும்.
 
 
* சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதே நம்மை காக்கும் 48 - இன்னுயிர் காப்போம் திட்டம் என்பதன் முதன்மை நோக்கம்
 
 
* விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மருத்துவ காப்பீடு இல்லாதவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். 
 
 
* விபத்துக்குள்ளானவரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகையும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இவ்வாறு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்னுயிர் காப்போம் திட்டம்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!!

related_post