dark_mode
Image
  • Sunday, 24 August 2025
இனி மாதம் குடும்ப தலைவிக்கு ரூ.1500:-பழனிசாமி அதிரடி,ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசம்

இனி மாதம் குடும்ப தலைவிக்கு ரூ.1500:-பழனிசாமி அதிரடி,ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசம்

குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1,500 வழங்கப்படும் எனவும் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

அதிமுக அறிவிக்கப்போகும் திட்டங்களை முன் கூட்டியே தெரிந்து கொண்டு, திமுக அறிவித்து வருகிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். நேற்று திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனுரில் சுமார் 750 ஏக்கரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

related_post