dark_mode
Image
  • Sunday, 24 August 2025
இந்திய அணி தோல்வி..!

இந்திய அணி தோல்வி..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் முதலில் களம் இறங்கிய ஷிகர் தவான் 4, கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அவர்களை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சியை இன்னும் கூட்டினார்.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த ரிஷப் பண்ட் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 23 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டும் எடுத்தார் . ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் நிதானமாக விளையாடி 48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார் . இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது .

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பட்லர் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ஜேஸன் ராய் சிக்ஸர், பவுண்டரிகளாக பறக்கவிட்டார். அவர் 49 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டி 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

related_post