dark_mode
Image
  • Sunday, 23 November 2025

இதையே திரும்பத் திரும்ப பேசுவது ஏன்? மேகதாது பற்றி கேட்டதும் கடுப்பான அமைச்சர் துரைமுருகன்

இதையே திரும்பத் திரும்ப பேசுவது ஏன்? மேகதாது பற்றி கேட்டதும் கடுப்பான அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

மேகதாது அணை வழக்கு

தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு அரசும், ஆணையமும் மேகதாது அணையைக் கட்ட முடியாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதையே திரும்பத் திரும்பப் பேசுவது ஏன் என்றும் கூறினார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கடந்த நவம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் கருத்துகள் அனைத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திடம் தெரிவிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தவறான தகவலுக்கு விளக்கம்

இதற்கிடையே, மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டதாக சில தகவல்கள் வெளியாகின.

அந்தத் தகவலில் எந்த உண்மையும் இல்லை எனவும், தமிழ்நாடு அரசின் கருத்துகளைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடனடியாக விளக்கம் அளித்திருந்தார்.

குற்றச்சாட்டுகளுக்குப் பதில்

இந்த நிலையில், சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம், மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை தி.மு.க. அரசு விட்டுக்கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “எந்தவொரு அரசாக இருந்தாலும், ஆணையமாக இருந்தாலும் மேகதாதுவில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

 

related_post