இது திமுக கோட்டைன்னு நிரூபிச்சு காட்டணும்!.. முக ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது. அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளும் ஏறக்குறைய கூட்டணிகளை உறுதி செய்துவிட்டன. திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கவில்லை என்றாலும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது. இருக்கிறது..
ஏற்கனவே 2001 முதல் 2021 வரை இரண்டு முறையும் தேர்தலில் தோல்வியடைந்தது திமுக. அதே நேரம் 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்று முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அதிமுக பலவீனமாக இருப்பதாக கருதப்படும் நிலையில் இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என முக ஸ்டாலின் கருதுகிறார்..
இந்நிலையில் திருவிடந்தையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ‘சென்னையும், வட தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என மீண்டும் நாம் நிரூபித்து காட்ட வேண்டும்.. எப்போதும் போல உங்களிடமிருந்துதான் வெற்றியை தொடங்கப் போகிறேன்.. அதனால் இந்த மண்டலத்திலிருந்து கூட்டத்தை தொடங்குகிறேன்’ என பேசியிருக்கிறார்.