dark_mode
Image
  • Monday, 15 December 2025

ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைத்தார் ஓபிஎஸ்.. அமித்ஷா வருகை காரணமா?

ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைத்தார் ஓபிஎஸ்.. அமித்ஷா வருகை காரணமா?
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், 'அதிமுக உரிமை மீட்புக் குழு' என்ற அமைப்பை நடத்தி வரும் நிலையில், இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் நாளை சென்னையில் நடைபெற இருந்ததாக அறிவிக்கப்பட்டது.
 
 
நாளைய கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக நாளை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில், சென்னையில் நாளை நடைபெற இருந்த தனது ஆதரவு நிர்வாகிகளை ஆலோசனை கூட்டத்தை திடீரென ஓ. பன்னீர்செல்வம் ஒத்திவைத்து விட்டதாக தகவல் புறப்படுகிறது.
 
 
ஓபிஎஸ் அவர்களின் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை காரணமாக இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து ஆலோசனை செய்துவிட்டு, அதன் பிறகு ஓபிஎஸ் தனது முடிவை அறிவிப்பார் என்று கூறப்படுவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

related_post