dark_mode
Image
  • Sunday, 20 April 2025

ஆகஸ்ட் 19-ல் துணை முதல்வராகிறார் உதயநிதி? அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபரப்பு பேச்சு..!!

ஆகஸ்ட் 19-ல் துணை முதல்வராகிறார் உதயநிதி? அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபரப்பு பேச்சு..!!
வரும் ஆகஸ்ட் 19ம் தேதி அமைச்சர் உதயநிதி, துணை முதல்வர் ஆகிறார் என அமைச்சர் ராஜகண்ணப்பன்  தெரிவித்துள்ளார்.
 
 
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்று ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கழித்து உதியநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.  அப்போதிருந்து அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கட்சிக்குள் பேச்சு அடிப்பட்டது.

அமைச்சர்கள் சிலர் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாக கூறியிருந்தனர். இது பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'உதயநிதியை துணை முதல்வராக்கும் கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை என பதிலளித்தார்.  

  
இந்த நிலையில், ராமநாதபுரத்தில் நடந்த 'தமிழ்ப்புதல்வன்' திட்ட துவக்க விழாவில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், துணை முதல்வர் உதயநிதி' என கூறிவிட்டு, அடுத்த நொடியே, 'சாரி, ஆகஸ்ட் 19ம் தேதிக்கப் பிறகுதான் துணை முதல்வராவார், அதற்கு முன்னாடி அப்படி சொல்லக்கூடாது எனக் கூறி சமாளித்தார்.  இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
 
ஆகஸ்ட் 19-ல் துணை முதல்வராகிறார் உதயநிதி? அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபரப்பு பேச்சு..!!

comment / reply_from

related_post