அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு..! நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல்காந்திக்கு ஜாமீன்

மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராகுல்காந்தி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேசும் போது, "பா.ஜனதா கட்சி நேர்மையான மற்றும் தூய்மையான அரசியலை நம்புவதாக கூறுகிறது.
ஆனால் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கட்சி தலைவராக இருக்கிறார்" என்று பேசினார். இது தொடர்பாக ராகுல்காந்திக்கு எதிராக உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும் பாஜக பிரமுகருமான விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று ராகுல்காந்தி ஆஜரான நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து ராகுல்காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description