அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஓபிஎஸ் பேட்டி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தால்தான் எம்.ஜி.ஆரின் நோக்கம் நிறைவேறும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைவது குறித்து நானும் செங்கோட்டையனும் பேசி கொண்டிருக்கிறோம். மேலும், விரைவில் நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசுவேன்" என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "அ.தி.மு.க. சட்டவிதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்படுகிறார்" என்று குற்றம் சாட்டினார். அவரது இந்தக் கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.