dark_mode
Image
  • Sunday, 24 August 2025
அதிகரிக்கும் கரோனா தொற்று- தினசரி பாதிப்பு 23,285

அதிகரிக்கும் கரோனா தொற்று- தினசரி பாதிப்பு 23,285

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,285 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,13,08,846 ஆக அதிகரித்துள்ளது.நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில் புதிதாக 23,285 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 15,157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 1,09,53,303 பேர் குணமடைந்தனர்.

கரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 117 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,58,306 ஆக அதிகரிதுள்ளது. கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,97,237 ஆக உள்ளது.

 

related_post