11 வீரர்களை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்
2024 ஐபிஎல் தொடருக்காக, மும்பை இந்தியன்ஸ் அணி 11 பேரை விடுத்துள்ளது. அதன்படி, முகமது அர்ஷத் கான், ராமந்தீப் சிங், ரித்திக் ஷோகீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜை ரிச்சர்ட்சன், ரைலி மெரிடித், கிறிஸ் ஜார்டன், சந்தீப் வாரியார் ஆகியோரை விடுவித்துள்ளது. தற்போது 17 பேர் அணியில் உள்ளதால், ஏலத்தில் குறைவான வீரர்களையே மும்பை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் அணி 8 பேரை விடுவித்துள்ளது.