🧘♂️ 🔔 ஜூலை 19 🔔 🧘♂️ † 📖 நற்செய்தி வாசகம் 📖 †

🧘♂️ 🔔 ஜூலை 19 🔔 🧘♂️
† 📖 நற்செய்தி வாசகம் 📖 †
☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️
🙏 "தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்" 🙏
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12 : 38-42 ✠
⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️
🌹 அக்காலத்தில்
மறைநூல்அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, “போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்” என்றனர்.
அதற்கு அவர் கூறியது: “இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.
தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!
தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!”
இது ஆண்டவரின் அருள்வாக்கு........👏

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description