dark_mode
Image
  • Friday, 29 November 2024

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 20-07-2021 செவ்வாய்க் கிழமை

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 20-07-2021 செவ்வாய்க் கிழமை

பெருநாள் இரவில் விழித்திருந்து பெறுவோம்.

عَنْ أَبِي أُمَامَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : (مَنْ قَامَ لَيْلَتَيْ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ) . رواه ابن ماجه
அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

யார் இரு பெருநாள் இரவில் இறையருளை நாடி விழித்திருந்து வணங்குகிறார்களோ அவர்களின் இதயங்கள் பிறர் இதயம் இறக்கும் நாளில் இறக்காது. என்றார்கள். (நூல் : இப்னு மாஜா)

அதே கருத்தைத் தழுவி உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரைத்த தகவல் ஒன்றை உபாதத் இப்னு ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

தப்ரானி ஹதீஸ் கிதாபில் இடம் பெற்ற அந்த தகவல் கீழே.

رواه الطبراني عن عبادة بن الصامت رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( من أحيا ليلة الفطر وليلة الأضحى لم يمت قلبه يوم تموت القلوب

மேற்கண்ட இவ்விரு ஹதீஸைத் தழுவி இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும், இரு பெருநாள் இரவை இறை வணக்கத்தால் உயிர்ப்பிப்பது முஸ்தஹப் - உகப்பிற்குரியது என்று கூறுகிறார்கள்

وقال النووي في المجموع :

قَالَ أَصْحَابُنَا : يُسْتَحَبُّ إحْيَاءُ لَيْلَتَيْ الْعِيدَيْنِ بِصَلاةٍ أَوْ غَيْرِهَا مِنْ الطَّاعَاتِ ، وَاحْتَجَّ لَهُ أَصْحَابُنَا بِحَدِيثِ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم : ( مَنْ أَحْيَا لَيْلَتَيْ الْعِيدِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ ) وَفِي رِوَايَةِ الشَّافِعِيِّ وَابْنِ مَاجَهْ : ( مَنْ قَامَ لَيْلَتَيْ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ تَعَالَى لَمْ يَمُتْ قَلْبُهُ حِينَ تَمُوتُ الْقُلُوبُ(

கல்விக்கடல் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் அதேகருத்தை வலியுறுத்தி வஸீத் என்ற தம் நூலில் எழுதியுள்ளார்கள்.

ذكر الإمام أبو حامد الغزالي في كتابه الوسيط في فقه الشافعية سنن العيد فذكر منها إحياء ليلته بالعبادة. واستدل على ذلك بقول النبي –صلى الله عليه وسلم- “من أحياء ليلة العيد لم يمت قلبه يوم تموت القلوب” قال ابن الصلاح: إحياء ليلتي العيد جاء فيه ما ذكر.

துஆக்கள் மறுக்கப்படாத இரவுகள்:

عن ابن عمر رضي الله عنهما قال: «خمس ليال لا يرد فيهن الدعاء: ليلة الجمعة، وأول ليلة من رجب، وليلة النصف من شعبان، وليلة العيد، وليلة النحر.
)رواه الديلمي في "مسند الفردوس(

ஐந்து இரவுகள் அவற்றில் துஆக்கள் மறுக்கப்படுவதில்லை.

ஜுமுஆவின் இரவு.
ரஜப் மாதத்தின் முதல் இரவு.
ஷஃபான் மாதத்தின் மத்திய இரவு.
நோன்புப் பெருநாள் இரவு.
ஹஜ்ஜுப் பெருநாள் இரவு.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : தைலமி

பெருநாள் காலையில்

من قال يوم العيد قبل الشمس سبحان الله وبحمده 300 مرة ووهبهن لاموات نور وحمل له الملك ألف نور فيدخله في قبره يوم يموت

யார் பெருநாள் அன்று சூரியன் உதிக்கும் முன் சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று முன்னூறு முறை ஓதி அதை மரணித்துவிட்ட முஸ்லிம்களின் ஆன்மாக்களுக்கு சேர்த்து வைத்தாரோ, அந்த ஒவ்வொரு கப்ரிலும் ஆயிரம் ஒளிகள் நுழைகின்றன. அவர் மரணித்த பின் ஒரு மலக்கு ஆயிரம் பேரொளிகளுடன் அவர் கப்ரில் நுழைவார்.

நூல் : துஹ்ஃபதுல் இக்வான்

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 20-07-2021 செவ்வாய்க் கிழமை

comment / reply_from

newsletter

newsletter_description