ஹாங்காங் பத்திரிகை : 10 லட்சம் பிரதிகள் விற்ற கடைசி இதழ்.!!
ஹாங்காங்கில் வெளியாகி வந்த ஆப்பிள் டெய்லி நாளிதழ் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதன் கடைசி பிரதி 10 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டது. கடந்த 26 ஆண்டுகளாக வெளியாகி வந்த நாளிதழ் ஆப்பிள் டெய்லி. தினசரி வெளியாகி வந்த இந்த நாளிதழ் ஜனநாயகவாதிகளின் ஆதரவு பெற்று இதழாக இருந்து வந்தது.
இந்நிலையில் அரசின் நடவடிக்கையால் அந்த நாளிதழின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. மேலும் அந்த நாளிதழின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தனது சேவையை நிறுத்துவதாக அப்பத்திரிக்கை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் தனது இறுதி இதழை 10 லட்சம் பிரதிகள் அச்சிட்ட ஆப்பிள் டெய்லி அனைத்து இதழ்களையும் விற்று தீர்த்தது.
ஆப்பிள் டெய்லி இதழின் கடைசி இதழை வாங்க மக்கள் காலை முதல் வரிசையில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.