வெள்ள பாதிப்பு; குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் 5000 ரூபாய் - முதல்வர் அறிவிப்பு!

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் தலா 5,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக, கடந்த ஒரு வார காலமாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல், இடியுடன் கூடிய அதி கனத்த மழை பரவலாக பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாகவே ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வந்தது. பல இடங்களில் வெள்ள நீர் தேங்கிய நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையின் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் திருவண்ணாமலை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது, அதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஃபெஞ்சல் புயல் நேற்று தர்மபுரி நோக்கி நகர்ந்த நிலையில், இப்போது கர்நாடகாவிற்கு செல்ல தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஃபெஞ்சல் புயல் இப்பொழுது வழுவிழந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின்படி இன்னும் சில நாள்களுக்கு மலை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியை பொருத்தவரை ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை காப்பாற்ற இந்திய ராணுவ வீரர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இடுப்பளவு நீரில் தத்தளித்து கொண்டிருந்த மக்களை படகுகளில் சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள், அவர்களை இப்போது தற்காலிக தங்குமிடத்தில் பத்திரமாக வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளை அரசு கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஈடு கட்டும் வகையில், அங்கு குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் ரூபாய் ஐயாயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருக்கிறார். ஆனால் இது இன்றிலிருந்து வழங்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. புதுச்சேரியை பொறுத்தவரை இன்னும் ஓரிரு நாள்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description