வில் அம்பு சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் - உத்தவ் தாக்கரே

சிவ சேனாவின் வில் அம்பு சின்னம் திருடப்பட்டுவிட்டது; சின்னத்தை திருடியவர்களுக்கு சரியான பாடம் கற்றுத் தர வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் தனது கட்சிக்கு எதிராக திரும்பினார். அவர் எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்த அவர், பாரதிய ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.
உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது. இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்தது. ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவ சேனா கட்சியின் பெயரையும் வில், அம்பு சின்னத்தையும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே தனது ஆதரவாளர்கள் முன்பு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: வில் அம்பு சின்னம் திருடப்பட்டிருக்கிறது. சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டியதுள்ளது. திருடன் பிடிபட்டுவிட்டான். நான் அந்த திருடனுக்கு சவால் விடுகிறேன். அந்த திருடன் வில் அம்புடன் களத்துக்கு வரும் போது பதிலடி கொடுப்போம்.
அவர்களுக்கு பால் தாக்கரேவின் முகம் தேவைப்படுகிறது. அவர்களுக்கு வில் அம்பு சின்னம் தேவைப்படுகிறது. ஆனால் சிவ சேனாவின் குடும்பம் தேவைப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா வருவதற்கு பால் தாக்கரேவின் முகம் தேவைப்படுகிறது. மக்கள் எது உண்மையான முகம், எது உண்மையான முகம் அல்ல என்பதை புரிந்து கொள்வார்கள். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description