NB.1.8.1 - LF.7.. இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. திடீரென பாதிப்பு அதிகரிப்பது ஏன்?

டெல்லி: நம் நாட்டில் திடீரென்று கொரேனா வைரஸ் பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதற்கு புதிதாக பரவும் கொரோனா வைரஸ்கள் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இப்போது பரவும் என்பி 1.8.1 (NB 1.8.1) மற்றும் எல்எஃப்.7 (LF 7) உள்ளிட்ட கொரோனா வைரஸ்கள் என்பது என்ன? இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது தலைதூக்க தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது என்பது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது பயப்படும் அளவுக்கு இல்லை என்றாலும் கூட மக்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஏனென்றால் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதை நாம் சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது. ஏனென்றால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் என்பது கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் அதிகமாக பரவ தொடங்கி உள்ளது. டெல்லியில் 23 பேரும், ஆந்திராவில் 4 பேரும் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.தெலுங்கானாவில் ஒருவரும், கர்நாடகாவின் பெங்களூரில் 9 மாத குழந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 20 நாட்களாக இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளாவில் மே மாதத்தில் மட்டும் 273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் கடந்த 3 நாட்களில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நம் நாட்டை எடுத்து கொண்டால் ஜேஎன் 1 வகை கொரோனா வைரஸால் தான் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நம் நாட்டில் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 53 சதவீதம் பேர் ஜேஎன் 1 வகை வைரஸாலும், 26 சதவீதம் பேர் பிஏ.2 வகை வைரஸாலும், மற்ற 20 சதவீதம் பேர் ஓமிக்ரானின் பிற திரிபு வைரஸ்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நம் நாட்டில் புதிய கொரோனா வைரஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸை எடுத்து கொண்டால் குறிப்பிட்ட காலஇடைவெளியில் திரிபு பெற்று புதிய வைரஸ்களாக மாறும். அந்த வகையில் தான் தற்போது நம் நாட்டில் புதிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய SARS-CoV-2 மரபணுவியல் கூட்டமைப்பு (INSACOG) உறுதி செய்துள்ளது.
அதன்படி நம் நாட்டில் புதிதாக என்.1.8.1 (NB.1.8.1) மற்றும் எல்.7 (LF.7) வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது சீனா உள்பட ஆசியாவின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க இந்த 2 வைரஸ்கள் தான் காரணமாகும். இந்த 2 வைரஸ்களால் நம் நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் ஒருவர் NB.1.8.1 வகை வைரஸால் பாதிக்கப்பட்டார். அதேபோல் இந்த மாதத்தில் குஜராத்தில் LF.7 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ்கள் என்பது நம் நாட்டில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஜேஎன்.1 வகை வைரஸின் திரிபுகளாகும்.
இந்த ஜேஎன் 1 வகை கொரோனா வைரஸ் என்பது ஓமிக்ரானின் குடும்பத்தை சேர்ந்தது. இந்த ஜேஎன் 1 வகை வைரஸ் நம் நாட்டில் ஓராண்டுக்கு முன்பே அடையாளம் காணப்பட்டு விட்டது. இந்த வைரஸ் என்பது மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தாது. பொதுவாக இந்த ஜேஎன் 1 மாறுபாடு கொண்ட வைரஸ் பாதிக்கும்போது சாதாரண சளி ஏற்பட்டால் ஏற்படும் பிரச்சனைகளை பொதுமக்கள் எதிர்கொள்ளலாம். இருப்பினும் இந்த ஜேஎன் 1 வைரஸ் என்பது துரிதமாக பரவும் தன்மை கொண்டது.
அதாவது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதாகும். இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றாலும் அதிகமானவர்கள் பாதிக்கப்படும் அச்சம் உள்ளது. இதற்கிடையே தான் டெல்லி, டெல்லியையொட்டிய உத்தரகாண்ட் மற்றும் கேரளா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை என்பது விடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன், மருந்து வசதிகள் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description