விமானம் கவிழ்ந்து விபத்து - 18 பேர் படுகாயம்.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொரோண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் இருந்த 80 பேரையும் அவசரகால மீட்பு குழுவினர் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினர்.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காட்சிகளில், விமானம் தலைகீழாக விழுந்து பயணிகள் அவசர வெளியேற்றம் செய்யப்படுவதும், மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்படுவதும் காணப்பட்டது.
இந்த விபத்தில் 18பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது, அதில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description