விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக தகவல் – கருத்துரிமை பாதுகாப்புக்காக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம், ஆர்ப்பாட்டம்!

முடக்கப்பட்ட விகடன் இணையதளம்; ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய சென்னை பத்திரிகையாளர் மன்றம்! - முழு விவரம்!
விகடன் மீது எடுக்கப்பட்ட மோசமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துச்சுதந்திரத்துக்கு ஆதரவாகவும் சேப்பாக்கத்தில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு தொடங்கியிருக்கிறது.
ஆர்ப்பாட்டம்
விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. அந்த முடக்க நடவடிக்கை சம்பந்தமாக அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைத்துறையினர் என பலதரப்பினரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.
அந்தவகையில் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஒரு ஆர்பாட்டத்தை அறிவித்து இப்போது நடத்தி வருகிறது.
வேலை செய்யவில்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்றிருப்பதாக கூறியுள்ளனர். முடக்கம் தொடர்பாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அவ்வாறாக தகவல்கள் வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலிச்சித்திரம் என்பது இதழியல்துறையின் பிரிக்க முடியாத அங்கமாகும். மிகவும் சிக்கலான கருத்துகளை கேலிச்சித்திரம் மூலம் மக்களுக்கு எளிதில் புரிவைக்கலாம் என்ற வகையில் அது பத்திரிக்கைத்துறையின் மிக முக்கியமான கருத்து ஆயுதமாகும். அதை முடக்க நினைப்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை முடக்கும் செயலாகும். ஆகவே, விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையான கண்டனைத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
கருத்துரிமையை பாதுகாக்க, நூற்றாண்டு கண்ட விகடன் நிறுவனத்துடன் சென்னை பத்திரிகையாளர் மன்றம் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.' என தீர்க்கமாக கூறியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3:30 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்பாட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தனர். விகடன் மீது எடுக்கப்பட்ட மோசமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துச்சுதந்திரத்துக்கு ஆதரவாகவும் சேப்பாக்கத்தில் அந்த ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு தொடங்கியிருக்கிறது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description