dark_mode
Image
  • Friday, 07 March 2025

மதுரையில் 75 பவுன் நகை அடமானம்.. வரலட்சுமியின் பழைய நகைகள் 45 சவரன்.. ஒரே நாளில் ஆடிப்போன கஸ்டமர்ஸ்

மதுரையில் 75 பவுன் நகை அடமானம்.. வரலட்சுமியின் பழைய நகைகள் 45 சவரன்.. ஒரே நாளில் ஆடிப்போன கஸ்டமர்ஸ்

 

சென்னை: பழைய நகைகளை புதிதாக மாற்றும்போது கவனமாக செயல்பட வேண்டும் என்று நிபுணர்கள் பொதுமக்களை பலமுறை அறிவுறுத்தியிருக்கிறார்கள்.. ஆனாலும், நகைகள் தொடர்பான மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே வருகின்றன.

 

தங்கத்தின் மதிப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.. அதனால்தான், பழைய தங்க நகைகள் என்றாலும், அதற்கான மதிப்பு குறைவதில்லை.. எப்போதுமே, நகைகளை வாங்கும் போதும் விற்கும் போதும் அதற்கு தரும் கூலி சேதாரம் என்பது அதன் மதிப்பை உயர்த்தும் அல்லது குறைக்கும்.

 

ஆனால், அவசரத்துக்கு அவைகளை வைக்க நேரிட்டாலும்., நகைகள் வாங்கி விற்பதில் பெரும்பாலும் நஷ்டம் தான் உண்டாகும். உருக்கிய நகையிலிருந்து தங்கத்தை தவிர மற்ற எல்லா கலப்பு உலோகங்களும் கரைந்துவிடும். சுத்த தங்கம் மட்டுமே மிஞ்சும்.

 

பழைய நகைகள் விற்பனை

 

பழைய தங்க நகைகளை விற்கும்போது, நகை வாங்கிய இடத்திலேயே ரசீது வைத்து விற்கும்போது, குறிப்பிட்ட அளவு லாபமாக இருக்க வாய்ப்புள்ளது.. அதிலும், ஹால்மார்க் நகையை வாங்கிய இடத்தில் விற்கும்போது ஒருகுறிப்பிட்ட லாபம் கிடைக்கும்.. கொஞ்சம் கூடுதலாகவும் பணம் கிடைக்கும். இப்படி நம்முடைய பழைய நகைகளை, நாமே நேரடியாக சென்று அடமானம் வைத்தாலும், நிறைய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

 

அப்படியிருக்கும்போது, வேறொரு நபர்களை நம்பி ஒப்படைத்து, சொந்த நகைகளை பறிகொடுக்கும் நிலைமையும் வந்துவிடுகிறது.. அப்படித்தான் சென்னையில் ஒரு சம்பவம் நேற்று நடந்துள்ளது.

 

45 சவரன் நகையும், 8 லட்சம் ரூபாயும்

 

புழல் எம்.எம்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி.. இவருக்கு 57 வயதாகிறது.. பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் செயல்பட்டு வந்த மகா ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில், நகை வாங்குவது, நகைகளை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

 

கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த நகைக்கடைக்கு வந்துபோனதால், கடை உரிமையாளரான சரவணகுமார் (42) என்பவர் வரலட்சுமிக்கு பழக்கம் ஆகியுள்ளார்... ஒருமுறை வரலட்சுமி தன்னிடமிருந்த 45 சவரன் நகைகளை புதிதாக மாற்றுவதற்காக, நகைக்கடைக்காரர் சரவணகுமாரிடம் தந்திருக்கிறார்.. அதற்கான ரூ.8 லட்சம் பணத்தையும் வரலட்சுமி கொடுத்துள்ளார்.

 

நகைகளை உருக்கும்போது நஷ்டம்

 

ஆனால், சரவணகுமார் நகைகளை மாற்றித் தருவதாக கூறி தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து வரலட்சுமி கேட்டதற்கு, "உங்கள் நகைகளை உருக்கும்போது சேதாரம் அதிகமாகி விட்டது. இதனால் எனக்கு நஷ்டமாகிவிட்டது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எப்படியாவது உங்களது நகைகளை கொடுத்து விடுகிறேன்" என்று கூறி வந்துள்ளார்.

 

இதனிடையே, அதாவது கடந்த 3 வருடத்திற்கு முன்பு, நகைக்கடை வியாபாரத்தில் நஷ்டம் வந்துவிட்டதாக கூறி , தன்னுடைய கடையையே திடீரென இழுத்து மூடிவிட்டார் சரவணகுமார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த வரலட்சுமி, தன்னுடைய நகைகளை உடனே கொடுத்துவிடுமாறு சரவணகுமாரிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், கடைசிவரை சரவணகுமார் நகைகளை திருப்பி தரவேயில்லை.

 

போலீசாரிடம் உறுதி தந்தார்

 

இந்நிலையில் கடந்த 13ம் தேதி சரவணகுமார் மீது திருவிக நகர் போலீஸில் புகார் தந்தார் வரலட்சுமி.. இந்த புகாரின்பேரில் நடந்த விசாரணையில், சரவணகுமாரை அழைத்து விசாரணை நடத்தினார்கள்..

 

அதற்கு சரவணகுமார், எப்படியாவது கடன் வாங்கி நகைகளை கொடுத்து விடுகிறேன் என்று உறுதி தந்திருக்கிறார். ஆனால், போலீசாரிடமும் நகையை தராமல் ஏமாற்றியிருக்கிறார்.. ஏற்கனவே பேசியபடி அவர் நகைகளை தராததால், சரவணக்குமாரை கைது செய்து இப்போது ஜெயிலில் அடைத்துள்ளனர்.. வரலட்சுமி தந்த 45 சவரன் நகைகள் என்ன ஆனது என்று கடைசிவரை தெரியவில்லை.

 

அதேபோல, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா காடுபட்டி காவல் நிலைய சரகம் மன்னாடிமங்கலம் கிராமத்தில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் துணை மேராக கணேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் இழந்துவிட்டாராம். அதனால், வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் நகைகளை திருடியிருக்கிறார்.. இப்போது, கணேஷூம் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

 

BY.PTS NEWS M.KARTHIK

comment / reply_from

related_post