dark_mode
Image
  • Saturday, 26 July 2025

மணவாளக்குறிச்சி : பாபுஜி மேல்நிலைப்பள்ளியின் வைரவிழா கொண்டாட்டம்..!

மணவாளக்குறிச்சி : பாபுஜி மேல்நிலைப்பள்ளியின் வைரவிழா கொண்டாட்டம்..!

பாபுஜி மேல்நிலைப்பள்ளியின் வைரவிழா நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி இரண்டு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பள்ளி வைரவிழா:

மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளியின் 75-வது ஆண்டு வைரவிழா மற்றும் பள்ளி சேர்மன் திரு. நசரேத் சார்லஸின் 75-வது பிறந்தநாள் விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி இரண்டு நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.

முதல் நாள் நிகழ்வுகள்:

முன்னாள் மாணவர் பேரவை விழா, விளையாட்டு விழா மற்றும் இலக்கிய மன்ற விழா ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. காலை 9.30 மணிக்கு மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவர் திரு. குட்டி ராஜன் தேசியக் கொடியை ஏற்றுவதன் மூலம் விழா துவங்குகிறது.

அதனைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். மாலை 5 மணிக்கு நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு பாபுஜி மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திரு. நசரேத் சார்லஸ் தலைமை வகிக்கிறார்.

இவ்விழாவில் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் வழங்கி, வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

வைரவிழா நினைவு மலர் வெளியீடு:

பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளியின் வைரவிழா இரண்டாம் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறவுள்ளன. காலை 9.30 மணிக்கு வைரவிழா நினைவுத்தூண் திறப்பு விழா நடைபெறும்.

மாலை 4.30 மணிக்கு நடைபெறும் முக்கிய விழாவில், பள்ளி தலைவர் திரு. நசரேத் சார்லஸ் தலைமையில் வைரவிழா நினைவு மலர் வெளியிடப்பட உள்ளது.

இவ்விழாவில்,

  • உதவி தலைமை ஆசிரியர் திரு. செல்லப்பன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

  • பள்ளி தலைமையாசிரியர் திரு. ஜெயசீலன் ஆண்டறிக்கையை சமர்ப்பிக்கிறார்.

மேலும் விழாவில் சிறப்புரை நிகழ்த்துவோர்:

  • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. பாலதண்டாயுதபாணி,

  • நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி கிறிஸ்டல் ஜாய்லெட்,

  • ஐ.ஆர்.இ. தலைவர் திரு. செல்வராஜன்,

  • முன்னாள் தலைமை ஆசிரியர் திரு. ரெஞ்சிதம்,

  • பாபுஜி நினைவு பி.எட். கல்லூரி டீன் திரு. அய்யாத்துரை,

  • பாபுஜி கல்விக் குழும நிர்வாக அலுவலர் திரு. ஜாண்சன்,

  • நோவா கல்வி அறக்கட்டளை செயல் அலுவலர் திரு. ராஜேந்திரன் ஆகியோர்.

விழாவிற்குச் சிறப்புரையாற்றும் தலைவர்கள்:

  • மாநில அமைச்சர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,

  • நாகர்கோவில் மாநகராட்சி மேயர்,

  • ஸ்டெல்லா மேரிஸ் கல்வி நிறுவனங்களின் சிஇஓ திருமதி கரோல் ஜீட்சன்,

  • பாபுஜி மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்வி நிறுவனங்களின் துணை சேர்மன் திருமதி சுமிதா சார்லஸ் ஜீட்சன் ஆகியோர்.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அமைச்சர் திரு. மனோ தங்க ராஜ் பங்கேற்று, கடந்த கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி, பரிசுகளை வழங்கி உரையாற்றுகிறார்.

விழா ஏற்பாடுகள் நோவா கல்வி அறக்கட்டளையினரால் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.

related_post