பொங்கல் பரிசில் ரூ.1000 ரொக்கம் இல்லை: பொதுமக்கள் அதிருப்தி, அரசுக்கு கோரிக்கை உயர்வு

தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கும் என அறிவித்துள்ளது. ஆனால், பொதுமக்கள் எதிர்பார்த்த ரூ.1000 ரொக்கம் வழங்கப்படவில்லை என்பதால் அதிருப்தி நிலவுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து கிடந்தனர். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
அதில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இலங்கை தமிழர் மறு வாழ்வுழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் தொகுப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அரசு 250 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. பொங்கல் தொகுப்புடன் இலவச வேஷ்டி- சேலைகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளில் ஜனவரி 9-ம் தேதியில் இருந்து பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முன்கூட்டியே டோக்கன் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வினியோகிக்க டோக்கன் அச்சடிக்கப்பட்டு தயாராகி வருகிறது. இன்றைக்குள் அந்த பணிகள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு நியாயவிலை கடைக்காரர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும்.
வருகிற 3ம் தேதியில் இருந்து வீடு வீடாக டோக்கன் வினியோகிக்கப்பட இருப்பதாகவும் அதில் நாள், நேரம் குறிப்பிட்டு வழங்கப்படும். பொங்கல் தொகுப்பை காலையில் 100 பேர், மாலையில் 100 பேர் வாங்கிடும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொதுமக்கள் எதிர்பார்த்த ரூ.1000 ரொக்கம் தொடர்பான அறிவிப்பு இடம் பெறவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். மேலும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் பொங்கல் பரிசு ரொக்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description