புதுச்சேரி சிறுமி கொலை... கைதான நபரின் வீட்டின் முன் குவிந்த பெண்கள்
புதுச்சேரி சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 2ஆம் தேதி காணாமல் போனார். சிறுமியை இரண்டு நாட்களாக போலீசார் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே இருந்த சாக்கடை கால்வாயில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
சாக்கடையில் கிடந்த மூட்டையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியின் உடலை மீட்ட போலீசார், உடற்கூராய்வுக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 54 வயதான விவேகானந்தன், 19 வயது இளைஞர் கருணாஸ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், உடற்கூராய்வு அறிக்கையில், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது.
புதுச்சேரி நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், குற்றவாளிக்கு யாரும் ஆஜராகக்கூடாது என வலியுறுத்தினர். புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
:நீருக்கு அடியில் செல்லும் இந்தியாவின் முதல் மெட்ரோ சேவை.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் ஆகியோர் நேரடியாக தலையிட்டு, சிறுமி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பாலியல் தொல்லைக்கு ஆளான, 9 வயது சிறுமியின் மரணத்துக்கு நீதிகேட்டு புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே ஏராளமானோர் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். குறிப்பாக இளைஞர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. சிறுமி கொலை வழக்கில் கைதான நபரின் வீட்டின் முன் குவிந்த பெண்கள், ஆவேசத்துடன் குரல் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.