நடக்க முடியாத 74 வயது பெண்ணை நடக்க வைத்து செங்கல்பட்டு சாய் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை சாதனை..!
ஆர்தரிடிஸ் எனும் முடக்குவாதத்தால் நடக்க முடியாதபடி பாதிக்கப்பட்ட 74 வயது பெண்ணுக்கு 2 கால்களிலும் முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை அதிநவீன Augmented Reality (AR) எனும் தொழில்நுட்பத்தை கொண்டு ஒரே அமர்வில் செய்து எலும்பியல் அறுவை சிகிச்சையில் சாதனை படைத்துள்ளது. செங்கல்பட்டை சேர்ந்த எழும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.அருண் தலைமையிலான மருத்துவக்குழு மற்றும் சாய் பல்சிறப்பு மருத்துவமனை Augmented Reality (AR) எனும் தொழில்நுட்பத்தை கொண்டு அறுவை சிகிச்சை செய்யும்போது, சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் சரியான நகர்வுகளை செய்வதை சரிபார்க்கவும், எலும்பு பகுதிகளை பெரும் துல்லியத்துடன் அறுக்கவும் முடியும்.
இந்த குறிப்பிட்ட நோயாளிக்கு சிறு துவாரம் முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த புது தொழில்நுட்ப உதவியுடன் நடைபெற்ற அறுவை சிகிச்சையை, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் வெற்றிகரமாக செய்திருந்தார்.
முக்கியமாக சிகிச்சைக்குப் பின்னர் நோயாளியின் வாழ்க்கை தரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த நோயாளிக்கு சிகிச்சை நிறைவடைந்த 24 மணி நேரத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் நடக்க முடிந்தது இந்த சிகிச்சையின் சிறப்பு என்றும் சொல்லலாம். டாக்டர் அருண் இது பற்றி கூறுகையில்: இந்த வகையான சிகிச்சை முறை எலும்பியல் துறையில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை 5 பிரதிபலிப்பதாக தெரிவித்தார். இந்த அறுவைசிகிச்சைமுறையில் செய்யப்படும் நோயாளிகள் தனது இயல்பு வாழ்க்கைக்கு அறுவை சிகிச்சை செய்த அடுத்த நாள் முதலே தனது அன்றாட வாழ்க்கை முறையை தொடரலாம்.
" செயற்கை நுண்ணறிவு மற்றும் கிஸி தொழில்நுட்பத்தில் உள்ள சமீபத்திய முன்னேற்றங்களை கொண்டு நோயாளியின் எலும்புகளை மட்டும் நாங்கள் சரிசெய்து தரவில்லை, அவரின் சுதந்திரத்தை மீட்டெடுத்துள்ளோம் என்பதில் முழு மகிழ்ச்சி அடைகிறோம். " என்றார்...டாக்டர் அருண்.!