நங்கவள்ளி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது..!

சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் இன்று (10.1.2025) வைகுண்ட ஏகாதசி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என கரகோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் அரசு அதிகாரிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பக்தர்களுடன் தரிசனம் செய்தனர். விழாவை ஒட்டி, கோவிலில் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.

நங்கவள்ளி ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், வைகுண்ட ஏகாதசி நாளில் அதிகாலை பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியால் மிகுந்த மக்கள்தொகையை ஈர்க்கும் முக்கிய புனித தலமாக திகழ்கிறது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description