dark_mode
Image
  • Friday, 07 March 2025

தமிழகத்தில் மழை எச்சரிக்கை வாபஸ்.. ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு..!

தமிழகத்தில் மழை எச்சரிக்கை வாபஸ்.. ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு..!
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு ஆந்திரா நோக்கி நகர்வதால், தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட மழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
தென்மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுவடைந்துள்ள நிலையில், இது படிப்படியாக வலுவடைந்து தற்போது தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் வட கடற்கரையில் உள்ள மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

 
இந்த நிலையில், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆரஞ்சு அலர்ட்  எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்று கனமழை எச்சரிக்கையும் திரும்ப பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை எச்சரிக்கை வாபஸ்.. ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு..!

comment / reply_from

related_post