தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

தமிழகத்தில் ஜனவரி 12 முதல் 16 வரை மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ள நிலையில், பொங்கல் தினத்தில் மழை பெய்யும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், தமிழகத்திற்கு ஜனவரி 12 முதல் 16 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார். மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்றும், குறிப்பாக மாஞ்சோலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், கடலோர பகுதிகளான சென்னை முதல் டெல்டா வரை மற்றும் தூத்துக்குடி பகுதியில் மழை பெய்யும் என்று அவர் கணித்துள்ளார். மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
பொங்கல் விடுமுறை நாளில் மழை பெய்வது ஆச்சரியமான விஷயம் அல்ல. ஆனால், அதே நேரத்தில் இந்த மழை பொங்கல் கொண்டாட்டத்தை பாதிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 14, 15 ஆகிய இரண்டு தினங்களில் மாஞ்சோலை மற்றும் குற்றாலம் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும், ஆனால் மற்ற நாட்களில் மழை இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலடுக்க சுழற்சி காரணமாக, ஜனவரி 12 முதல் 16 ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், ஜனவரி 19 முதல் 21 வரை லேசான மழை பெய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெகு தொலைவில் ஒரு காற்றழுத்த தாழ்வு இருக்கிறது என்றும், அதைப் பற்றி தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description