பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய நிலையில் அவர் கூறிய முக்கிய தகவல்களை தற்போது பார்ப்போம்.
பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் விதத்தை பார்க்கும் போது, ஒருநாள் அந்த நாட்டையே அது அழித்துவிடும். பாகிஸ்தான் இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.
பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பயங்கரவாதமும் வணிகமும் கூட ஒரே நேரத்தில் இருக்க முடியாது"
பாகிஸ்தான் எதிர்பார்க்காத வகையில் அங்கு பலத்த சேதத்தை இந்தியா கொடுத்துள்ளது. அதனால்தான், இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது
குருத்வாராக்கள், கோயில்கள், வீடுகள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்கியுள்ளது பாகிஸ்தான்.
10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்புகொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்."
இப்படி ஒரு முடிவை இந்தியா எடுக்கும் என பயங்கரவாதிகள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை ஆதரிக்காமல், இந்தியாவை தாக்கியுள்ளது பாகிஸ்தான். நமது பள்ளி, கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், வீடுகள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்கியுள்ளது
பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்தியா அழித்ததை உலகமே பார்த்தது. பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டும் பயங்கரவாத இயக்க தலைவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வந்தனர். ஒரே தாக்குதலில் அவர்களை இந்தியா அகற்றியுள்ளது. நண்பர்களே, இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிருப்தி, விரக்தி அடைந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் பயிற்சி மையங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா இப்படி ஒரு முடிவை எடுக்கும் என பயங்கரவாதிகள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் - பிரதமர் மோடி
ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல. நாட்டு மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு மற்றும் அது நீதியை வழங்குவதற்கான உத்தரவாதம் - பிரதமர் மோடி
நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் குலைக்கும் முயற்சியாக பஹல்காம் தாக்குதல் நடந்தது. நாட்டையே உலுக்கிய அந்த தாக்குதலில் அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன.”
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description