டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி! வெளியான முக்கிய அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் கூட்டம் வரும் 28ம் தேதி நடக்க உள்ள நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.டி.என்.பி.எஸ்.சி., குருப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல பதவிகளுடன் 6,244 காலியிடங்கள் இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், காலி பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரிக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து உள்ளனர். ஜூன் 9ம் தேதி எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது.
இந் நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் வரும் 28ம் தேதி நடத்தப்படுகிறது.ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்பது குறித்து விவாதித்து, முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதில் ஏற்கனவே அறிவித்தப்படி இம்மாத இறுதிக்குள் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description