dark_mode
Image
  • Friday, 04 April 2025

வாண்டுகள படிக்க சொல்லுங்க.. 1 முதல் 9ஆம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு எப்போது? முழு விபரம் இதோ!

வாண்டுகள படிக்க சொல்லுங்க.. 1 முதல் 9ஆம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு எப்போது? முழு விபரம் இதோ!

சென்னை: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை காலையில் முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வி இயக்குனர்கள் அறிவித்துள்ளனர்.

 

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர்.

 

அவ்வாறு செயல்படும் பள்ளிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களும் பொதுத் தேர்வை எழுத உள்ளனர். வழக்கமாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.

 

இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டுக்காக வெளியிடப்பட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை திருத்தப்பட்ட நாட்காட்டியின் படி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என அறிவித்திருந்தது. இதை அடுத்து முழு ஆண்டு தேர்வுக்காக மாணவர்கள் தங்களை தயார் செய்து வந்தனர். இதற்கிடையே தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இதுதொடர்பாக தனியார் பள்ளி, தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி இயக்குநர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. அதன்படி அரசு /அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு மற்றும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2024-25ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

 

அனைத்து வகை தொடக்க / நடுநிலை /உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என அதில் கூறப்பட்டுள்ளது.

 

அந்த அறிவிப்பின்படி ஒன்பதாம் தேதி 4 மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு தமிழ் தேர்வு, 11ஆம் தேதி நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கான ஆங்கில தேர்வு நடைபெறுகிறது. 15ஆம் தேதி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை தமிழ் தேர்வு, நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு கணக்கு தேர்வு நடைபெறுகிறது. 16ஆம் தேதி விருப்ப மொழி பாடமும், 17ஆம் தேதி ஒன்று முதல் மூன்று வகுப்புகளுக்கு ஆங்கிலத் தேர்வு, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. 21ஆம் தேதி ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்கு கணக்கு தேர்வும், 4, 5 வகுப்புகளுக்கு சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது.

 

இதேபோல ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு எட்டாம் தேதி தமிழ் தேர்வு, ஒன்பதாம் தேதி ஆங்கில தேர்வு, 16ஆம் தேதி கணக்கு தேர்வு, 17ஆம் தேதி விருப்ப மொழி, 21ஆம் தேதி அறிவியல் தேர்வு, 22 ஆம் தேதி உடற்கல்வி தேர்வு, 23ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. இறுதியாக 24ஆம் தேதி 8 மற்றும் 9ஆம் வகுப்பு களுக்கு சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது.

 

செய்தியாளர்.மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி

comment / reply_from

related_post