நாளையும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு உள்ள பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு நாளை(டிச.3) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. விளைநிலங்கள், சாலைகள், குடியிருப்புகள் என பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீரால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந் நிலையில் நாளை(டிச.3) பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:
பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை
விழுப்புரம்
கடலூர்
பள்ளிகள் விடுமுறை
திருவண்ணாமலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
பெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள புதுச்சேரியில் நாளை(டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description