'ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை ரூ.16,982 கோடி விடுவிப்பு' - நிர்மலா சீதாராமன் பேட்டி

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ந்தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி பற்றி விவாதிக்கப்படும் என பட்டியலிடப்பட்டிருந்தன. போதிய நேரம் இல்லாததால் அவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து நிதி மந்திரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- "ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை ரூ.16,982 கோடியை விடுவிக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. இழப்பீடு நிதியில் புதிய நிதி இல்லாத போதும், நிலுவை தொகையை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தனது சொந்த நிதியில் இருந்து நிலுவை தொகையை விடுவிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையாக ரூ.1,201 கோடி கிடைக்கும். பென்சில் ஷார்ப்னர் மீதான ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதலில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமைக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடர்பான அறிக்கை சிறிய மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது." இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description