சென்னை மாநகராட்சி சார்பில் வரி வசூல் செய்ய பல்வேறு நடவடிக்கைகள்!

சென்னை மாநகராட்சி சார்பில் வரி வசூல் செய்ய பல்வேறு எளிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. நினைவூட்டல்கள் மூலமும் வரி வசூல் செய்யும் நடைமுறையை பின் பற்றி வருகிறது.
சென்னை மாநகராட்சி, 2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) 910 கோடி ரூபாய் சொத்து வரி வசூலித்துள்ளது.
இலக்கு 1,100 கோடி ரூபாய்
இந்த காலகட்டத்திற்கான இலக்கு 1,100 கோடி ரூபாய் ஆகும். இலக்கை அடைய, மாநகராட்சி அதிகாரிகள் வரி வசூல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளனர். கடந்த ஆண்டு அதிகபட்சமாக 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி வசூலானது குறிப்பிடத்தக்கது.