dark_mode
Image
  • Tuesday, 22 April 2025

சிஎஸ்கே தோல்வி தொடரும், டிக்கெட் விற்பனை மந்தம் – ஐ.பி.எல் மீது ரசிகர்கள் விரக்தி வெளிப்பாடு

சிஎஸ்கே தோல்வி தொடரும், டிக்கெட் விற்பனை மந்தம் – ஐ.பி.எல் மீது ரசிகர்கள் விரக்தி வெளிப்பாடு

கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை, வீரர்கள் சொதப்பல் ஆட்டத்தை கண்ட ரசிகர்கள், இந்த முறை சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டியை காண ஆர்வம் காட்டவில்லை. இதனால் டிக்கெட் வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நாடு முழுவதும் நடக்கிறது. போட்டிகளுக்கான டிக்கெட் கட்டண நிர்ணயத்தில் முறைகேடு நடப்பதாகவும், கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை நடப்பதாகவும் ரசிகர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

இவ்வாறு அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி போட்டியை காணச் செல்லும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஆட்டம் எதுவும் சிறப்பாக இல்லை. சென்னை அணி வீரர்கள், அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பி வருகின்றனர். தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை தழுவியதால் ரசிகர்களின் ஆர்வம் குறைந்து விட்டது.

இந்நிலையில் வரும் 25ம் தேதி ஐதராபாத்தை எதிர்த்து சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.

வழக்கமாக, டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுக்களும் விற்று தீர்ந்து விடும். ஆனால், இன்று அப்படி நடக்கவில்லை. டிக்கெட் விற்பனை மிகவும் மந்தமாக நடப்பதாக, ரசிகர்கள் கூறியுள்ளனர்.இதன் மூலம், சென்னை அணியின் ஆட்டம் மீதும், ஒட்டு மொத்தமாக ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி மீதும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

comment / reply_from

related_post