dark_mode
Image
  • Wednesday, 16 April 2025

சாட்டை யூடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பே இல்லை – சீமான் அதிரடி விளக்கம்

சாட்டை யூடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பே இல்லை – சீமான் அதிரடி விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'சாட்டை' என்ற யூடியூப் சேனலுக்கும், தனது கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று இன்று (15 ஏப்ரல் 2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

இந்த அறிக்கையில், திருச்சி துரைமுருகன் நடத்தும் 'சாட்டை' யூடியூப் சேனலில் வெளிவரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்துகளாகும்; அவற்றுக்கு நாம் தமிழர் கட்சி எந்த வகையிலும் பொறுப்பு ஏற்காது என்று சீமான் தெளிவுபடுத்தியுள்ளார் .

மேலும், இந்த அறிக்கையை சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் .

இந்த அறிவிப்பு, 'சாட்டை' யூடியூப் சேனல் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தொடர்பு குறித்து சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

சாட்டை யூடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பே இல்லை – சீமான் அதிரடி விளக்கம்

comment / reply_from

related_post