சமவேலை சம ஊதியம் - கோரிக்கையை பரிந்துரை செய்ய குழு.!!!
சமவேலை சம ஊதியம் என்ற கோரிக்கையை முன் வைத்து இடைநிலை ஆசிரியர்கள் போராடி வரும் நிலையில், இந்த கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அந்த குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்லப்படும் என்றும் கூறியுள்ளார்.