கேரளாவில் ஜூலை 24 மற்றும் 25 முழு ஊரடங்கு..!!
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறையத் தொடங்கியுள்ளன. ஆனால், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து தற்போது கேரளாவில் ஜூலை 24 மற்றும் 25 என இரு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பேரிடர் மேலாண்மை வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில், "கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஜூலை 24 மற்றும் 25 என இரு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டுப்பாடுகள் 22ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளைத் தொடர்ந்து, ஜிகா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 41 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.