குடும்பத்தை அரிவாளால் வெட்டிய கொடூர தந்தை – இரண்டு பிள்ளைகள் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடந்த கொடூர சம்பவத்தில், அசோக்குமார் என்ற ஆடவர் தனது 13 வயது மகள் மற்றும் 5 வயது மகனை அரிவாளால் வெட்டிக்கொன்று கொடூரத்தைக் கண்டித்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், அவரது மனைவி தவமணி மற்றும் 3 பிள்ளைகளில் ஒருவரான அருள் குமாரி உயிருக்கு போராடிய நிலையில், உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிரமான குடும்ப வன்முறை காரணமாகவே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிய வருகிறது. சம்பவத்திற்குப் பிறகு, அசோக்குமாரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் பெருகி வரும் சூழலில், குடும்ப அம்சங்களை கவனித்தல் முக்கியம் என்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
BY. PTS NEWS M.KARTHIK
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description