குஜராத்தை உலுக்கிய விபத்து: நொறுங்கிய விமானம்; கதறிய நெஞ்சங்கள்!

ஆமதாபாத்: குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட, 'ஏர் இந்தியா' விமானம், மருத்துவக் கல்லுாரி விடுதி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானதில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில், ஒரேயொரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
விமானம் மோதியதில் மேகனி நகரில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதி பலத்த சேதம் அடைந்தது.
விபத்து நடந்த இடத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறி கிடந்தது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தன்னார்வலர்கள் மீட்டனர்.
ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய ஆமதாபாத்தின் பி.ஜே.மருத்துவ கல்லூரி விடுதி உள்ள பகுதியில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தன.