கன்னியாகுமரி மாவட்டம், தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு

இனயம் புத்தன்துறை புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்தினால் கடற்கரை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம்,புதுக்கடை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இனயம் புத்தன்துறை கடற்கரை கிராமம் உள்ளது .
இந்த கிராமத்தின் மையப் பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது .இந்த ஆலயத்தில் வருடாந்திர திருவிழாவானது கடந்த பத்து நாட்களுக்கு முன்பு துவங்கியது பதினொன்றாம் நாளாகிய (இன்று) சனிக்கிழமை (மார்ச் 1 ஆம் தியதி) மாலையில் ஏராளமான பக்தர்கள் சர்ச் முன்பு கூடியிருந்தனர் .இவர்கள் தேர் பவனிக்காக ஆலயத்தில் சுற்றுப்புற வளாகத்தில் தேர் செல்வதற்கு இடையூறாக உள்ள பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக இந்த கிராமத்தை சேர்ந்த தனிஸ்லாஸ் அவர்களுடைய மகன் விஜயன் (52), விக்டர் அவருடைய மகன் ஜஸ்டஸ் (33 ),பெர்லின் அவருடைய மகன் சோபன் ( 45 ) கோஸ்மான் அவருடைய மகன் மனோ ( 40 ) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து ஆலயத்திலிருந்து உயரமான சக்கர ஏணியை எடுத்து தேர் செல்லும் பாதையை சீர் செய்வதற்கு ஆலயத்தின் முன் பகுதிக்கு இழுத்து கொண்டு வந்தபோது ஆலயத்தில் முன்பு சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியில் உரசி உள்ளது . இதில் மின்சாரம் பாய்ந்து 4 பேரும் சம்பவ இடத்திலே உடல்கள் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதைக்கண்ட மக்கள் அலறியடித்து ஓடினர் இவர்கள் உடனே மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது பின்னர் இவர்களை ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கிருந்து உடல்கள் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது இறந்த 4 பேரும் மீன்பிடி தொழில் செய்பவர்கள். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம்,
இணையம் புத்தன்துறையில் கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி பலியான 4 பேர் உடல்களையும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர்
அழகு மீனா அவர்கள் பார்வையிட்டு அடுத்த கட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் அறிவுறுத்தினார்கள்.
BY. PTS NEWS M.KARTHIK
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description